நாடாளுமன்றம் 
இந்தியா

மார்ச் 16இல் மாநிலங்களவைத் தேர்தல்!

Staff Writer

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை பதவிகளுக்கு மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாகின்றன.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார், சத்தீஷ்கர், அரியாணா, இமாசலப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் மொத்தமாக 37 இடங்கள் காலியாகின்றன. இதில், 17 எம்பிக்கள் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியும், மீதமுள்ள 20 எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல் 4 ஆம் தேதியும் நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மாநிலங்களவை எம்பிக்கள் என். ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, தம்பிதுரை, ஜி.கே. வாசன், பி. செல்வராசு உள்ளிட்டோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதி நிறைவடையவுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான அறிவிப்புகள் வருகிற பிப். 26 ஆம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 5 ஆம் தேதி வேட்புமனுக்கள் தாக்கலுக்கான கடைசி நாளாகும். மார்ச் 6 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுவைத் திரும்ப பெற மார்ச் 9 ஆம் தேதி கடைசி நாள்.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மார்ச் 16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து அன்று மாலையே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழ்நாட்டில் திமுக சார்பில் 4 எம்.பிக்களையும், அதிமுக சார்பில் 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும்.