டாட்டா தொழில் குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டா நேற்று நள்ளிரவில் காலமானார்.
மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தன்னுடைய 86 ஆவது வயதில் இயற்கை எய்தி உள்ளார்.
மறைந்த ரத்தன் டாட்டாவுக்கு ஜிம்மி, நோயல் என இரண்டு தம்பிகளும் தாயார் சீமோனும் உள்ளனர்.
டாட்டாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆர்என்டி என அழைக்கப்பட்ட ரத்தன் நாவல் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 1990 முதல் 2012வரை இருந்துவந்தார். அவரைத் தொடர்ந்து சைரஸ் மிஸ்திரி 2016வரை அப்பதவியில் இருந்தார். இப்போதுவரை சந்திரசேகரன் டாட்டா குழுமத் தலைவராக இருந்துவருகிறார்.