மத்திய அரசின் கூரை சூரியசக்தித் திட்டத்தின் நுகர்வோர்கள் அதிகம் உள்ள கேரளாவிலும் ராஜஸ்தானிலும் பெரும்பாலான வீடுகளில் மின் கட்டணம் பூஜ்ஜியம் ஆகியுள்ளது.
கேரளாவின் 50% வீடுகளும், ராஜஸ்தானின் 42% வீடுகளும் மொட்டை மாடியில் சூரிய மின்சக்திக்கான வசதியை ஏற்படுத்தியுள்ளதால் அந்த வீடுகளின் மின் கட்டணச் செலவு வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்தியா முழுவதும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திய நான்கில் ஒரு வீட்டிற்கு மின் கட்டணம் பூஜ்ஜியமாக உள்ளது.
வீட்டின் கூரைமேல் சோலார் பேனல்கள் வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சுய மின் உற்பத்தியால் மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பதில் கேரளா முதலிடத்திலும், ராஜஸ்தான் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தத் திட்டத்திற்கு ஆந்திர மாநில மக்கள் மிகக் குறைந்த அளவில் விண்ணப்பித்துள்ளனர்.
குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து அதிக விண்ணப்பங்கள் வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின் கட்டணங்கள் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இதுபோன்ற திட்டங்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் நம் வீட்டின் மின்சாரத் தேவைகளில் தன்னிறைவு அடைவதுடன், மின் கட்டணத்தில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்.