இந்தியா

சித்தாராமையா பதவி விலகல்; புதிய முதலமைச்சர் டிகே சிவகுமார்!

Staff Writer

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து சித்தாராமையா விலகுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அவரது இல்லத்தில் கர்நாடக மாநில அமைச்சர்கள் கலந்துகொண்ட காலை உணவு சந்திப்பு நடந்தது. அதில் தன்னுடன் ஒத்துழைப்பாகப் பணியாற்றிய அனைவருக்கும் சித்தாராமையா நன்றி தெரிவித்தார்.

அந்த சந்திப்பின்போது துணை முதல்வர் டிகே சிவகுமார் சித்தாரமையாவின் காலில் விழுந்து ஆசிபெற்றார். அடுத்த முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்க உள்ளதை இது உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

2023-ல் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சித்தாராமையா முதலமைச்சர் ஆனார். சில காலம் கழித்து ஏற்பட்ட உட்கட்சி கருத்துவேறுபாடுகளைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சர் நியமிக்கப்படுவார் என்ற கருத்து கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் சித்தாராமையா, காங்கிரஸ் மேலிட உத்தரவின் பேரில் பதவி விலகி, டிகே சிவகுமார் முதலமைச்சர் ஆகிறார். சித்தாராமையா, காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய பதவி எதையாவது ஏற்கக் கூடும் எனத் தெரிகிறது.