வெள்ளி விழா காணும் பிரதமர் மோடி 
இந்தியா

நரேந்திர மோடி - 25 : ஒரு மாதத்துக்கு தமிழக பா.ஜ.க. கொண்டாட்டம்!

Staff Writer

பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சராகி 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு ஒரு மாத காலத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் :


"பிரதமர் நரேந்திர மோடி முதல்வராகவும், பிரதமராகவும் மக்கள் பணியாற்றி 25 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அவர் தேசத்திற்கு ஆற்றிய மக்கள் சேவையினைக் கொண்டாடும் வகையில், வரும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு பா.ஜ.க. சார்பில் 'சேவா சங்கல்ப் அபியான்' என்ற பெயரில் பல்வேறு மக்கள் நல சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழிநடத்திட மாநிலப் பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது." என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அக்குழுவில், சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் உட்பட ஏழு பேர் இடம்பெற்றுள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram