சோனம் வாங்சுக் 
இந்தியா

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட சோனம் வாங்சுக்!

Staff Writer

டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக கடந்த 26 நாள்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்ட கல்வியாளர் சோனம் வாங்சுக், அமைச்சர்கள் முன்னிலையில் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராகவும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மாணவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தார்.

அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் அவரின் உண்ணாவிரதத்தைக் கைவிட அறிவுறுத்தி வந்தனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது, நீட் வினாத்தாள் கசிவு, கல்வி முறை சீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதங்களை மேற்கொள்ள அரசு ஒத்துழைக்கும், நீட் வினாத்தாள் கசிவினால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரீசலனை நடத்தப்படும் உட்பட்ட வாக்குறுதிகளை ஜே.பி. நட்டா அளித்தார்.

மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா அளித்த வாக்குறுதிகளை ஏற்றுகொண்ட சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதத்தை அவர்கள் முன்னிலையில் முடித்துக்கொண்டார்.

சோனம் வாங்சுக்கின் இந்த முடிவை வரவேற்பதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களின் போராட்டம் அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram