'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' 
இந்தியா

'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே'... இந்தியாவில் ரூ.500 கோடி வசூல்!

Staff Writer

இந்தியாவில் குறுகிய காலத்தில் அதிக வசூல் செய்த முதல் ஹாலிவுட் படமாக 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா, ஜேக்கப் பேட்டலான், மார்க் ருஃபாலோ உட்பட்டோர் நடிப்பில் 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' உருவாகியுள்ளது.

இந்த ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம், வெளியான 10 நாள்களிலேயே உலகம் முழுவதும் ரூ.14,000 கோடி வசூலை குவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜூலை 11ஆம் தேதி வெளியான இந்தப் படம், 12 நாள்களில் ரூ.500 கோடி வசூல் செய்த முதல் ஹாலிவுட் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

முன்னதாக, இந்தியாவில் ரூ. 477.50 கோடி வசூலுடன், வசூலில் முதலிடத்தில் இருந்த 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' ஹாலிவுட் திரைப்படம். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram