திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு சரியானதே என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்ற மலையில் தர்காவின் அருகில் உள்ள நில அளவைக் கல்லில் கார்த்திகை அன்று தீபம் ஏற்றவேண்டும் என மறைந்த இந்து முன்னணித் தலைவர் இராம கோபாலன் பிரச்னையை எழுப்பிவந்தார். அவருக்குப் பிறகும் அந்த அமைப்பும் பா.ஜ.க.வும் இப்பிரச்னையைப் பெரிதாக எழுப்பியது.
சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக மாறும் சூழல் ஏற்பட்டதை அடுத்து, பிரச்னை நீதிமன்றத்துக்குப் போனது. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்துத்துவ அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பளித்தார்.
அதை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதிசெய்தனர்.
இதை எதிர்த்து, தர்கா வழிபாடு செய்யும் இமாம் உசைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், பி.பி.வரலே அமர்வு, உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு சரிதான் என்று உறுதிப்படுத்தியது.
இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.