சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க முதலமைச்சர் 
இந்தியா

மோடி முன்னிலையில் சுவேந்து அதிகாரி மேற்குவங்க முதல்வராகப் பதவியேற்பு!

Staff Writer

பிரதமர் முன்னிலையில் மேற்குவங்க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்றார். 

கொல்கத்தாவின் பிரபல பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் சுவேந்து அதிகாரியின் அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. 

முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மமதாவின் வலதுகரமாக இருந்தவர். அவரைப் போலவே எளிமையான தோற்றத்தைப் பேணும்வகையில் காவி குர்தாவுடன் இன்று பதவியேற்றுக்கொண்டார். 

பிரதமர் மோடி அவரைக் கட்டித்தழுவியதுடன் முதுகில் தட்டிக்கொடுத்தும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.  

’வடமாநிலக் கட்சியான பா.ஜ.க., வங்க உணர்வுகளை மதிப்பதில்லை’ என மமதா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், இரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளான இன்று பதவியேற்பு விழா நடத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக, பதவியேற்புக்கு முன்னர், மேற்குவங்கத்தில் பா.ஜ.க.வைக் கட்டி வளர்த்த மகான்லால் சர்கார் எனும் 98 வயது தலைவரின் காலில் விழுந்து பிரதமர் மோடி மரியாதை செய்தார்.