இந்தியா கூட்டணியினர் போராட்டம்  
இந்தியா

இந்தியா கூட்டணி போராட்டத்தால் ரூ.11 கோடி இழப்பு எனக் குற்றச்சாட்டு!

Staff Writer

தில்லியில் இந்தியா கூட்டணியினர் நடத்திய போராட்டத்தால் ரூ.11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தில்லி வர்த்தக - தொழில் துறை சங்கத்தின் தேசியத் தலைவர் பிரிஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஞானேஷ்குமார், தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் விவகாரத்தில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக வெளியானத் தகவலைத் தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியினர் சார்பில் தில்லியில் பிரம்மாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதனால், வணிகர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வணிக சங்கத்தினர் கூறினர். இதுகுறித்து தில்லி வர்த்தக - தொழில்துறை சங்கத் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறியுள்ளதாவது:

"இந்தப் பேரணியின் காரணமாக, தில்லியின் முக்கிய 25 முதல் 30 சந்தைகள் பாதிக்கப்பட்டன. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள 3,00,000 கடைகளில், 80% கடைகள் அதாவது 2,40,000 கடைகள் மூடப்பட்டன.

மேலும், தில்லியைச் சுற்றியுள்ள நகரங்களில் இருந்துவரும் வாடிக்கையாளர்கள், வணிகர்கள் யாரும் அன்று வரவில்லை. வணிகரீதியான செயல்பாட்டிற்காக, வழக்கமாக தில்லிக்கு வரும் 3,00,000 முதல் 4,00,000 பேர் வரவில்லை.

வாகனப் போக்குவரத்து தடைபட்டதால், கடைகளுக்கு சரக்கு எடுத்துச்செல்ல முடியாமல் வணிகர்கள் தவித்தனர்.

தீபாவளிப் பண்டிகையையொட்டி நடைபெற வேண்டிய ரூ.10 கோடி முதல் ரூ.11 கோடி வரையிலான வருமானம் பாதிப்படைந்தது." என்று தில்லி வர்த்தக - தொழில்துறை சங்கத் தலைவர் தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram