ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா ரயில் விபத்து 
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: 233 பேர் பலி!

Staff Writer

ஒடிசாவில் நேற்று மாலை ஏழுமணி அளவில் நடந்த கோர விபத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டன. பெங்களூரு- ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்றும் விபத்தில் சிக்கின. இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது.

ஒடிசா பாலாசூர் மாவட்டம் வழியாக வந்துகொண்டிருந்தபோது பெங்களூரு ஹவுரா அதிவேக ரயில் தடம் புரண்டு பக்கத்து வழித்தடத்தில் பெட்டிகள் விழுந்தன. இதைத் தொடர்ந்து கொரமண்டல் எக்ஸ்பிரஸ் அதில் மோதியது. சரக்கு ரயில் பெட்டிகள் மீதும் இதன் பெட்டிகள் மோதின.

  இடிபாடுகளில் சிக்கி பல பயணிகள் பலியாகிவிட்டனர். இதுவரை 200க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 900க்கும் அதிகமான பயணிகள் படுகாயம் அடைந்தனர்.   காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேசிய மீட்புப் படைப்பிரிவுகள்களமிறக்கி மீட்புப்பணி நடந்துவருகிறது.