ரயில்வே அபராதங்கள் இரட்டிப்பு 
இந்தியா

இனி ரயில்வேயில் அத்துமீறினால் 2 மடங்கு அபராதம்!

Staff Writer

இந்திய ரயில்வேயின் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கான அபராதம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இது ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த குறைந்தபட்ச அபராதத் தொகை ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதிகபட்ச தண்டனையில் எந்த மாற்றமும் இன்றி முன்னர் இருந்ததைப்போலவே ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, ரூ. 1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்கள், பயணச்சீட்டில் குறிப்பிட்டு இருக்கும் தொலைவைத் தாண்டி பயணிப்பது உட்பட்ட குற்றங்களுக்கு இந்த திருத்தப்பட்ட அபராதம் பொருந்தும்.

இந்திய ரயில்வே துறையில் பயணச்சீட்டு நடைமுறைகளை பலப்படுத்தவும், ரயில்வே துறையின் வழிமுறைகளை பயணிகள் பின்பற்ற ஊக்குவிப்பதற்காகவும் இந்த நடைமுறை அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram