ஒரே நாடு ஒரே தேர்தல் மக்களவையில் டி.ஆர்.பாலு  
இந்தியா

வந்தது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா... கூட்டுக் குழு ஆய்வுக்கு விட தி.மு.க. கோரிக்கை!

Staff Writer

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கான சட்ட முன்வரைவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பவேண்டும் என்று தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு மக்களவையில் வலியுறுத்தினார்.

முன்னதாக, இன்று காலையில் மக்களவையில் இன்று அவை கூடியதும் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வல் இம்மசோதாவை அறிமுகம் செய்தார். 

காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி பேசுகையில், நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் இரு வேறு இணையான அரசமைப்பு அங்கங்கள் என்றும் ஒன்றை இன்னொன்று எப்படி கைக்கொள்ள முடியும் என்றும் அரசமைப்பின் அடிப்படைக்கே இது எதிரானது என்றும் குறிப்பிட்டார்.

அடுத்து பேசிய சமாஜ்வாதியின் , நாட்டின் பன்முகத் தன்மையை இது குலைத்துவிடும் என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். 

ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்ற இது தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திருணமூல் காங்கிரஸ் கட்சியின் கல்யாண் பானர்ஜி சாடினார். 

தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு பேசியபோது, சலசலப்பு எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் அவர் பேசிக்கொண்டிருந்தார். கூட்டாட்சி முறைக்கும் அரசமைப்புச் சட்டத்துக்கும் எதிரான இந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு விடவேண்டும் என்று கோரி தன் பேச்சை முடித்துக்கொண்டார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram