ஹரித்துவார் சிறையில் இருந்து தப்பியோடிய சிறைக்கைதிகள்.  
இந்தியா

சிறைக்கைதிகளின் ராமாயண நாடகம்; சீதையை தேடிய வானர சேனைகள் தப்பி ஓட்டம்!

Staff Writer

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் சிறையில், ராமாயண நாடக அரங்கேற்றத்தின் போது, வானர சேனை வேடமிட்ட கைதிகள் இருவர், சீதையை தேடிச்செல்வதாக கூறி, தப்பிச்சென்றனர். அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது.

உத்தரகண்ட், ஹரித்துவார் மாவட்ட சிறையில், ஆயுத பூஜையையொட்டி, ராமாயணம் நாடகம் நடைபெற்றது. அப்போது, சீதையை ராவணன் தூக்கி சென்ற பிறகு வானர வேடமிட்ட 2 கைதிகள் சீதையை தேடிச்செல்லும் காட்சியில் நடித்து கொண்டிருந்தனர். வசனம் பேசி முடித்துவிட்டு, சீதையை தேடுவதற்காக சென்ற வானர வேடமிட்ட 2 கைதிகள் வெகு நேரமாகியும் திரும்ப வரவில்லை. நாடகத்தை காவலர்கள் அனைவரும் மெய்மறந்து பார்த்த போது, வானர வேடமிட்ட 2 கைதிகள் ஏணி மூலம் தப்பியோட்டம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தப்பிய இரு கைதிகளும் பல்வேறு கொடிய குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். கொடுங்குற்றவாளிகள் இருவர் வானர வேடமிட்டு, தப்பியோடிய நிலையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில், 6 சிறைத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram