நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் புதிய முறையைக் கொண்டுவருவதில் மோடி தலைமையிலான அரசு தீவிரமாக உள்ளது. கடந்ததேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க. மூத்ததலைவர் அமித்ஷா இதை உறுதிபடக் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஒப்புதல் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டமுன்வடிவு தாக்கல்செய்யப்படும் என்று கூறப்படுகிறது.