கேரள முதலமைச்சர் சதீசன் 
இந்தியா

கேரள முதல்வராக சதீசன் தேர்வு- காங்கிரஸ் அறிவிப்பு

Staff Writer

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்துவந்தது. ஒருவழியாக சற்று நேரத்துக்கு முன்னர் கேரள காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தீபா தாஸ் முன்ஷி தில்லியில் வி.டி.சதீசன்தான் கேரளத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். 

முன்னதாக, கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரமேஷ் சென்னிதலா ஆகியோரும் இந்தப் போட்டியில் இருந்தனர்.

கூட்டணிக் கட்சிகள், காங்கிரசின் மாவட்டக் குழுக்களின் வலியுறுத்தலுக்குப் பிறகு சதீசனின் பெயர் முடிவாகியிருக்கிறது.