கொல்கத்தாவில் மெஸ்ஸி நிகழ்வில் பங்கேற்ற ரசிகர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என டிஜிபி ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
’கோட் டூர் ஆஃப் இந்தியா 2025’ என்ற பயணத்தின்படி மெஸ்ஸி இன்று அதிகாலை லியோ மெஸ்ஸி கொல்கத்தா வந்தார்.
இன்று அதிகாலை கொல்கத்தா வந்த லியோனல் மெஸ்ஸி முதலில் தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
பின்னர், சால்ட் லேக் திடலுக்கு வந்தார். அப்போது அவரை சுற்றை 60, 70 பாதுகாவலர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் சூழ்ந்து கொண்டனர். இதனால் ரசிகர்கள் மெஸ்ஸியை பார்க்க முடியாமல் கூச்சலிட்டனர். மெஸ்ஸியும் சால்ட் லேக் திடலை விட்டு சென்றதால், ரசிகர்கள் நாற்காலிகளை தூக்கி வீசத் தொடங்கினார்கள். இதனால் சால்ட் லேக் திடலே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இதனை அடுத்து இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். மெஸ்ஸி தங்கியிருக்கும் விடுதிக்கு அருகிலும் கூட்டம் கூடியதால் தடியடி நடத்தப்பட்டது.
தடியடி நடத்தப்பட்டது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்புக் கேட்டார்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். டிக்கெட் மோசடி நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இது குறித்து மேற்கு வங்கத்தின் டிஎஸ்பி ராஜீவ் குமார் பேசியதாவது: “மெஸ்ஸி விளையாடாமல் சென்றதால் ரசிகர்களிடம் பதற்றம் அல்லது கோபம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மெஸ்ஸி இங்கு வந்து, ரசிகர்களைப் பார்த்து கை அசைத்துவிட்டு, சிலரைச் சந்தித்துவிட்டு செல்வதுதான் திட்டம். இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எதாவது தவறு செய்துள்ளார்களாக என்பது குறித்து விசாரிக்க ஓர் ஆணையம் அமைக்கப்பட்டும்.
பணம் திருப்பி அளிக்கப்படுமென விழா ஏற்பாட்டாளர்கள் எழுதிக் கொடுத்துள்ளார். சூழ்நிலை கட்டுக்குள் இருக்கிறது. ஏற்கெனவே, விழா ஏற்பாட்டாளர்களை காவலில் வைத்துள்ளோம்.” என்றார்.