இந்தியா

17ஆவது குழந்தை பெற்ற 55 வயது பாட்டி!

Staff Writer

பதினேழாவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார், 55 வயதான பெண் ஒருவர். இந்த சம்பவம் நடந்திருப்பது இராஜஸ்தான் மாநிலத்தில்! 

உதய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாடோல் கிராமத்தில் வசிக்கும் ரேகா கால்பெலியா என்பவர்தான் அந்தப் பெண்மணி. தன் மூத்த மகனுக்கு 35 வயதாகும் நிலையில், இவர் அண்மையில் புதிய குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

இந்தக் குடும்பத்தில் மொத்தம் 24 பேர் இருக்கிறார்கள். இன்னும்கூட குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும். பாவம், ரேகாவுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்ததுமே இறந்துபோய்விட்டன என்பது துயரம்.

தற்போதைய நிலையில், வீட்டில் பலரும் உழைத்தும்கூட அனைவருக்குமான வருமானத்தை இவர்களால் ஈட்ட முடியவில்லை.

இந்த நவ நவீன காலத்திலும், பாட்டியான பிறகும் ரேகா இத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது, ஏதோ அவருடன் தொடர்புடையது மட்டுமில்லை. தெற்கு இராஜஸ்தானில் இருக்கும் குறிப்பிட்ட பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில், இந்த உயிராபத்தான அவல நிலை தொடர்ந்தபடி இருக்கிறது.

உதய்ப்பூர் மாவட்டத்தின் பல வட்டாரங்களில், குறிப்பாக, பழங்குடியினர் பகுதிகளில் மகப்பேறு, பச்சிளங் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என மாநில அளவில் பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

இதைத் தடுப்பதற்கான குறிப்பான ஆலோசனைகளில் இராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது.