அனலாக் டெய்ரி 
இந்தியா

சொமேட்டோவின் உடனடித் தடை உத்தரவு!

Staff Writer

பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, தனது தளத்தில் விற்பனை செய்யப்படும் சில பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

‘அனலாக் டெய்ரி’ எனப்படும் பால், பால் சார்ந்த பொருட்களுக்குப் பதிலாக, அந்த உணவுகளைப் போன்ற சுவை, தோற்றம் கொண்டிருக்கும், தாவர எண்ணெய், ஸ்டார்ச், தாவர புரதங்கள் உட்பட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட உணவுகள் சொமேட்டோ தளத்திலிருத்து உடனடியாக நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும், இதைப்போன்ற பொருட்களைப் பயன்படுத்தாமல், இயற்கையான பால் பொருட்களுக்கு மாறுமாறு உணவகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உணவகங்கள் தாங்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்களில் பயன்படுத்தியப் பொருட்களின் விவரங்களைத் தெளிவாக லேபிளில் குறிப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இவற்றைப் பின்பற்றாமல், தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் உணவகங்கள்  சொமேட்டோ தளத்திலிருந்து நீக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், வெளிப்படைத் தன்மை, பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram