மக்களவை  
இந்தியா

எம்.பி.கள் அரட்டை அடிக்கக்கூடாது : மக்களவையில் ஓம்பிர்லா

Staff Writer

நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் அரட்டையில் ஈடுபடக்கூடாது என அவைத் தலைவர் ஓம்பிர்லா அறிவுறுத்தியுள்ளார். 

நீண்ட நேரம் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கக் கூடாது என்றும் அப்படிப் பேசுவோரை தான் பெயரிட்டுக் கூறவேண்டி இருக்கும் என்றும் அவர் அவையில் இன்று எச்சரிக்கை விடுத்தார்.

உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்றும் மக்களவைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.