ஒடிசா விபத்து
ஒடிசா விபத்து 
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் குழு விரைகிறது

Staff Writer

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உதவ தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு ஒடிசா விரைகிறது.

இன்று காலை 9 மணி விமானத்தில் புவனேஸ்வர் செல்லும் இக்குழு, அங்கிருந்து தரைமார்க்கமாக மூன்று மணி நேரப் பயணத்தில் உள்ள விபத்து நடந்த இடத்துக்குச் சென்று சேரும்.

இந்த ரயில் விபத்து காரணமாக இன்று நடக்க இருந்த கலைஞர்  பிறந்த நாள் பொதுக்கூட்ட  நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.