கர்நாடக மாநிலம் ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயரில் மற்ற வாக்காளர்களின் பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் முன்னணி தலைவர் இராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையம் இதை மறுத்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணைய ஞானேஷ்வர் இராகுலின் புகார் அடிப்படையே இல்லாதது என்று தன் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனாலும், கர்நாடகத்தில் உள்ள குறிப்பிட்ட தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பல வேட்பாளர்களை நீக்கும் முயற்சி நடத்தப்பட்டுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து அந்த ஊரின் தேர்தல் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது என்றும் இதை தானாகவே ஆணையம் விசாரித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
வாக்காளரைக் கேட்காமல் யாரும் எப்படியும் அவருடைய பெயரை நீக்கிவிட முடியாது என ஞானேஷ்குமார் அடித்துக் கூறியுள்ளார்.