குஜராத்தில் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பா.ஜ.க. அமைச்சரவை உறுப்பினர்கள் இன்று திடீரென கூண்டோடு பதவி விலகினர். பதினாறு அமைச்சர்களும் தங்கள் விலகல் கடிதத்தை முதலமைச்சரிடம் அளித்தனர்.
புதிய அமைச்சரவையை உருவாக்க வசதியாக அவர்கள் பதவிவிலகல் கடிதத்தை அளித்துள்ளனர். நாளை முற்பகல் 11.30 மணியளவில் புதிய அமைச்சரவை பதவியேற்கும்.
மைய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தலைவர் நட்டா முதலிய பலரும் இதில் கலந்துகொள்வார்கள் என பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.