குடியரசு முன்னாள் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரெனப் பதவி விலகியதை அடுத்து அவரைப் பற்றிய பொதுவெளித் தகவல் எதுவும் இல்லாமல் இருந்துவந்தது. அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகளின்தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், இராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக அவர் இருந்தநிலையில், அதற்கான ஓய்வூதியத்துக்கு அவர் விண்ணப்பம் செய்துள்ளார். இந்தத் தகவல் இன்று வெளியானதும் தன்கரின் பெயர் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.