மத்திய அமைச்சர் எல்.முருகனின் புதுதில்லி இல்லத்தில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசின் பங்கேற்பில் நாட்டுப்புறக் குழுவினர் கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழிசை உட்பட்ட தமிழக பா.ஜ.க. தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.
பராசக்தி திரைப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனும் அதன் வில்லன் ரவி மோகனும் மோடியின் பொங்கலில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் முன்னிலையில் திருவாசகம் ஆல்பம் இசைத்துக் காண்பிக்கப்பட்டது. ஜிவிபிரகாசின் பாடலை பிரதமர் மிகவும் இரசித்தபடி கேட்டார்.