மக்களுடன் பிரியங்கா காந்தி 
இந்தியா

பிரியங்கா வயநாட்டில் 3.13 இலட்சம் வாக்குகளில் முன்னிலை!

Staff Writer

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா போட்டியிட்ட கேரள வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அவர் முன்னிலையில் உள்ளார்.

காலை 10.30 மணி நிலவரப்படி, 3, 13, 426 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மோக்கேரி ஒரு இலட்சத்து 8 ஆயிரம் வாக்குகளுடன் மிகவும் பின்தங்கியுள்ளார். 

அவரையடுத்தே 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை மட்டும் பெற்று பா.ஜ.க. கூட்டணியின் நவ்யா ஹரிதாஸ் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.