மணிப்பூர் உயநீதிமன்றத் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய சட்ட அமைச்சகம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.
மணிப்பூர் தலைமை நீதிபதி கே. சோமசேகர் நேற்று ஓய்வுபெற்ற நிலையில், அந்த இடத்துக்கு சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவரைத் தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த வியாழனன்று பரிந்துரை செய்தது. அதைத் தொடர்ந்து இந்த நியமனம் நடைமுறைக்கு வருகிறது.
ஏற்கெனவே, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருந்து இராமலிங்கம் சுதாகர், எம்.வி.முரளீதரன், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் மணிப்பூர் தலைமை நீதிபதியாக ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.