ஓம் பிரகாஷ் சௌதாலா 
இந்தியா

யார் இந்த ஓம் பிரகாஷ் சௌதாலா?

Staff Writer

அரியானாவில் நான்கு முறை முதலமைச்சராக இருந்த ஓம் பிரகாஷ் சௌதாலா தன் 87 வயதில் இன்று காலமானார். 

முன்னாள் துணைப்பிரதமர் தேவிலாலின் மகனான இவர், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் நிறுவனரும் ஆவார். 

முதுமை காரணமாக பலவீனமாக இருந்த அவர், கடைசியாக கடந்த அக்டோபர் 5ஆம் தேதியன்று அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளியே வந்தார்.  

1970இல் ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினராக அரசியல் அடியெடுத்து வைத்த சௌதாலா,78இல் சட்டவிரோதமாக கைக்கடிகாரங்களைக் கடத்தியதாக விவகாரத்தில் மாட்டிக்கொண்டார். 

இருப்பினும் தேவிலாலின் நியாய வழிப் பிரச்சாரத்தில் பங்கெடுத்ததன் மூலம், தன் அரசியல் பயணத்தைச் சரிசெய்துகொண்டார். அந்தத் தேர்தலில் அவர்களின் கட்சி வென்றது.

1990களில் அடிமட்டத் தொண்டர்களிடையே பெரிய தலைவராக சௌதாலா உருவெடுத்தார். ஆனாலும் போட்டி அரசியல்வாதி ஒருவரைக் கொன்றதாக மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

1987இல் மாநிலங்களவை உறுப்பினராக ஆனபோதும் இரண்டு ஆண்டுகளில் தந்தையின் முதலமைச்சர் பதவியில் 1989இல் அமர்ந்தார். ஆபால் 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாததால் பதவியை இழந்தார்.

1990, 1995, 1999-2005 என நான்கு முறை முதலமைச்சர் பதவியில் இருந்த ஓம்பிரகாஷ் சௌதாலா, சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தில்லி திகார் சிறையில் தண்டனையை அனுபவித்தார். அங்கிருந்த மூத்த கைதி இவர்தான் என்று கூறப்பட்டது.

2020இல் அவர் விடுவிக்கப்பட்டார்.