இன்ஃபோசிஸ் நிறுவனம் 
செய்திகள்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அறிவிப்பா இது...? - வியப்பில் ஊழியர்கள்!

Staff Writer

ஒரு நாளைக்கு 9.15 மணி நேரத்திற்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அவர்களின் வேலை நேரம் நிறைவடைந்ததை நினைவூட்டும் விதமாக எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்புகிறது இன்ஃபோசிஸ் நிறுவனம்.

வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறி விமர்சனத்துக்குள்ளனவர் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி.

இந்த நிலையில், பணியாளர்களின் வேலை நேரத்தைக் கண்காணிக்கும் ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது இன்ஃபோசிஸ். ஒரு நாளைக்கு 9:15 மணி நேரங்களுக்குமேல் வேலை செய்யும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது. இது, ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இது, தொலைதூரத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையைப் பராமரிப்பது ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் நீண்டகால தொழில்முறை வெற்றிக்கு மிக முக்கியமானது"என்றார்.