இன்ஸ்டாகிராம் பயனர்கள் (மாதிரிப்படம்) 
செய்திகள்

இன்ஸ்டா ரீல்ஸ் இனி 3 நிமிடங்கள் வரை பதிவிடலாம்!

Staff Writer

இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடலாம் என்ற புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

உலகில் அதிகம் பேரை கவர்ந்துள்ள சமூக ஊடகம் என்ற பெயர் பெற்றது இன்ஸ்டாகிராம். இளைய தலைமுறையினர், திரையுலகத்தினர், பிரபல விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சமூக ஊடகத்தில் பயனர்கள் 90 விநாடிகள் கொண்ட ஒரு ரீல்ஸ் வீடியோ பதிவை வெளியிடலாம். அதற்கு மேலான கால அளவு கொண்ட ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட முடியாது.

ஆனால் இனி அந்த கட்டுப்பாடு கிடையாது. 3 நிமிடங்கள் வரை கால அளவு கொண்ட ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடலாம், பகிரலாம் என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அதன் தலைமை செயல் அதிகாரி ஆடம் மொசைரி வெளியிட்டு உள்ளார்.

இன்ஸ்டாகிராம் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வண்ணம் இப்படிப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது.