செய்திகள்

இந்த ஆண்டே இதழியல், ஊடகவியல் கல்வி நிறுவனம் தொடக்கம்!

Staff Writer

இதழியல், ஊடகவியல் கல்வி நிறுவனம் இந்த ஆண்டு முதலே தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

செய்தித்துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தை முன்னிட்டு துறையின் அமைச்சர் சாமிநாதன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“இதழியல் துறையில்  பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஊடகக் கல்வி மேம்பாட்டிற்கு ஒரு முதன்மையான கல்வி நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் ஆர்வம் மிகுந்த இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கவும், இதழியல் மற்றும் ஊடக ஆய்வியலில் தரமான கல்வியினை     வழங்கிடும் வகையில், இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் (Institute of Journalism and Media Studies) இக்கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.” என்று அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.