ஜெயிலர் ரஜினி 
செய்திகள்

நாளை ஜப்பானில் வெளியாகும் ஜெயிலர்!

Staff Writer

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நாளை ஜப்பானில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதைத்தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்தையும் எடுக்க திட்டமிட்டு வருகிறார் நெல்சன். அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஜெயிலர் 2 படம் தொடர்பான புரோமோ வெளியாகி இணையத்தை கலக்கிவருகிறது. படப்பிடிப்பும் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் நாளை ஜப்பானில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.