பிரதமர் மோடியின் மாநிலங்களை உறுப்பினர் கமல்ஹாசன் 
செய்திகள்

பிரதமரை சந்தித்த கமல்ஹாசன் - என்ன பரிசு வழங்கினார்?

Staff Writer

தில்லியில் பிரதமர் மோதியை சந்தித்துள்ளார் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன். மரியாதை நிமித்தமாக சந்தித்து, கீழடி தொடர்பான கோரிக்கையை முன்வைத்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் "ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளை தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது. தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்" என பதிவிட்டுள்ளார்.

கீழடி வடிவம் கொண்ட நினைவுப் பரிசு ஒன்றையும் பிரதமருக்கு வழங்கியுள்ளார்.