நடிகர் கார்த்தியுடன் இயக்குநர் பிரேம் குமார் 
செய்திகள்

‘பேரன்புடன் மெய்..’ - இயக்குநர் பிரேம் குமாருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்!

Staff Writer

நடிகர் கார்த்தி இயக்குநர் பிரேம் குமாருக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.

கார்த்தி - பிரேம் குமார் கூட்டணியில் உருவான மெய்யழகன் திரைப்படம் பல தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்தது. படத்தில் பேசப்பட்ட உறவுகளின் அருமையும் அன்பும் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதால் தமிழ் சினிமாவின் நல்ல திரைப்படங்களில் ஒன்று என விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றது.

தற்போது, பிரேம் குமார் 96 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்திற்காக பிரேம் குமாருக்கு ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தார் ராக்ஸ் வகை கார் ஒன்றை நேரில் சென்று பரிசளித்துள்ளார். நடிகர் சூர்யாதான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவரும் கார்த்தியும் இணைந்தே இக்காரை பரிசளித்துள்ளனர்.

காரை கண்டதும் மகிழ்ச்சியடைந்த பிரேம் குமார் கார்த்தியிடம் கையொப்பம் இடச் சொன்னார். கார்த்தி, “பேரன்புடன், மெய்” என எழுதினார். இந்த பரிசளிப்பு ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.