இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை திருவள்ளூரில் உள்ள அவரது ஸ்டூடியோவில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் சந்தித்து பேசியுள்ளார். இந்த திடீர் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அய்யர்கண்டிகையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான பிரம்மாண்ட ஸ்டூடியோ உள்ளது. இங்கு நேற்று மாலை 6.30 மணிக்கு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வந்திருந்தார். அவர் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் வரை நீடித்தது. இந்த சந்திப்புக்கான காரணம் ஏதும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் "சத்யம், சிவம் சுந்தரம் எனும் வெவ்ஸ்" என்ற மத்திய அரசின் குறும்படத்திற்கு இசையமைத்து கொடுத்ததால் இசையமைப்பாளர் ரகுமானை, எல். முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.