நில மோசடி விசாரணை தொடர்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நில மோசடி தொடர்பாக தனது யூ டியூப் சேனலில் சவுக்கு சங்கர் தவறான தகவல் பரப்புவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் நில மோசடி பிரிவு ஆய்வாளர் சிவ சுப்ரமணியன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது பாரதிய நியாய சன்ஹீதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.