நடிகர் விஷால் 
செய்திகள்

‘விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும்’ – நடிகர் விஷால்

Staff Writer

‘விஜய் பத்திரிக்கையாளர்களை சந்தித்தால் அனைத்து கேள்விகளுக்கான விடையும் கிடைத்துவிடும்.” நடிகர் விஷால் கூறியுள்ளார்.

நடிகர் விஷால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது விஷாலிடம் மும்மொழிக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "மனிதனின் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் திணிக்க முடியாது. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி.. எந்தவொரு திணிப்பும் வெற்றிபெறாது.

அதேநேரம் இங்கு பல பள்ளிகளில் ஏற்கெனவே மூன்று மொழிகளைச் சொல்லித் தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி என்றால் அவை அனைத்தையும் நிறுத்த வேண்டும். பசங்க என்ன படிக்க வேண்டும் என்பதைப் பெற்றோர் தான் முடிவெடுக்கிறார்கள். எந்த மொழியில் படித்தால் பலன் இருக்கும் என்பதை எல்லாம் யோசித்தே பெற்றோர் முடிவெடுக்கிறார்கள்" என்று பதிலளித்திருக்கிறார்.

தொடர்ந்து அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அதில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு நேரடியாகப் பதில் அளிக்காமல் எல்லாம் இறைவன் கையில் என்பதைப் போல கையை மட்டும் காட்டியவர், விஜய்யின் அரசியல் பார்வை குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், "நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும். நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள். அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தால் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவும்.

அதன் பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள். அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தால் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும். சமூக சேவை செய்யும் எண்ணம் இருக்கும் அனைவருமே அரசியலுக்குள் வரலாம்” என நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.