முதல்வர் மு.க.ஸ்டாலின் 
செய்திகள்

“திமுக வெற்றியை பறிக்கும் எதிரிகளின் நாடகங்களை முறியடிப்போம்” – கட்சியினருக்கு முதல்வர் அறிவுரை!

Staff Writer

2026 தேர்தலில் திமுகவின் வெற்றியை பறிக்க பல கோணங்களில் எதிரிகளை உருவாக்குவார்கள், நாடகங்கள் நடத்துவார்கள், ஆனால் அதை முறியடிக்க வேண்டும் என்று கட்சியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்ற நிலையில், அதற்கு பணியாற்றிய திமுக பூத் கமிட்டி, திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் காணொலி காட்சி வழியாக பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், வரலாறு காணாத வெற்றியையும் மிகமோசமான தோல்வியையும் நாம் சந்தித்து இருக்கிறோம். வெற்றிகளால் தலைகனம் கண்டதில்லை, தோல்வியால் துவண்டு போனதில்லை.

தமிழகத்தில் பிற்போக்கையும் வெறுப்பையும் விதைக்கும் மக்கள் விரோத சக்திகளுக்கும் அவர்களின் கைப்பாவைகளுக்கும் இடமில்லை என்பதை ஈரோடு இடைத்தேர்தல் நிரூபித்துள்ளது.

பொதுத்தேர்தலில் வெற்றியை பறிக்க தரம் தாழ்ந்து பேசுவார்கள் என்றும், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் சதித்திட்டத்திற்கு முதன்மை தடையாக இருப்பவர்கள் தமிழர்களும், திமுகவினரும் தான்.

பல்வேறு வகைகளையில் எதிரிகளை உருவாக்குவார்கள், நாடகங்கள் நடத்துவார்கள். இதையெல்லாம் முன்பிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் எந்த திட்டம் போட்டாலும் அதை நாம் முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டை முன்னேற்ற உங்களின் உழைப்பை கொடுங்கள் வரலாறு காணாத வெற்றி காண்போம்” என்றார்.