விகடன் இணையதளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சென்னைப் பத்திரிகையாளர் சங்கம்- எம்.யு.ஜெ. வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியர்களை கைகால்களில் விலங்கிட்டு அமெரிக்க அரசு நாடுகடத்திய விவகாரத்தில், அமெரிக்காவின் அவமதிப்பைச் சகித்துக் கொண்ட ஒன்றிய அரசை விமர்சித்து விகடன் கார்ட்டூன் வெளியிட்டது.
இதற்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட்டோர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கையை சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
#Stand_For_Freedom_of_Expression” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னைப் பத்திரிகையாளர் மன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது.