பிரதமர் மோடி - அமெரிக்க திபர் டிரம்ப் 
செய்திகள்

டிரம்ப் – மோடி சந்திப்பு: "MAGA+MIGA=MEGA" - என்ன அர்த்தம்?

Staff Writer

'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக இருந்தது. இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்' என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை, மெட்டா நிறுவனர் எலான் மஸ்க் தன் குடும்பத்துடன் சந்தித்தார். பின்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரும், அமெரிக்க ஆளுங்கட்சி பிரமுகருமான விவேக் ராமசாமி சந்தித்து பேசினார்.

பின்னர், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்பை, பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் இன்று அதிகாலை சந்தித்து பேசினார். வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பிற்குப் பின், பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டிரம்ப் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக இருந்தது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிபர் டிரம்ப் எப்போதும் ’அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுங்கள் (Make America Great Again - MAGA)’ என்று பேசுவார். நாங்கள் இந்தியாவில் விக்ஷித் பாரத் என்பதை நோக்கி செயல்படுகிறோம். இதை அமெரிக்கப் பாணியில் சொல்ல வேண்டுமானால், ’இந்தியாவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம் (Make India Great Again- MIGA)’ என்பதாகும். இந்த இரண்டும் சேரும் போது, இந்தியாவும் அமெரிக்காவும் வளம் பெறுவதற்கான மெகா கூட்டணி உருவாகும் (MEGA) ' என்று மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு, பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். அவரை விமான நிலையத்தில், அந்நாட்டு உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.