செய்திகள்

ரயில்களைக் குறைக்கும் சேடிஸ்ட் அரசு - முதல்வர் ஸ்டாலின் கடும் கோபம்!

Staff Writer

கும்பமேளாவுக்காக வட மாநிலங்கள் முழுவதும் மக்கள் கூட்டம் தொடர்வண்டிகளில் அலைமோதி வருகிறது. இதில் ஆங்காங்கே நெரிசலில் சிக்கி உயிரிழந்ததும் நிகழ்ந்துள்ளது. 

நாடாளுமன்றம்வரை பேசப்பட்டது. சமூக ஊடகங்களிலும் இதைப் பற்றி பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.    

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் சன் தொலைக்காட்சி செய்தி ஒன்றைக் குறிப்பிட்டு, மிகவும் கடுமையாக தன்னுடைய சமூக ஊடகப் பதிவில் கருத்தை வெளியிட்டுள்ளார். 

”சமூக வலைத்தளம் முழுக்க இரயில் #பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்! அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.