நடிகை விஜயலட்சுமி - நாதக சீமான் 
செய்திகள்

"என் கண்ணீர் உன்னை சும்மா விடாது" – கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி!

Staff Writer

“என்னுடைய கண்ணீர் சீமானை சும்மா விடாது” என நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் – நடிகை விஜயலட்சுமி விவகாரம் இப்போது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது.

இன்று காலை சீமான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “அந்த நடிகை பாலியல் தொழிலாளி… அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” என்று பேசியிருந்தார்.

சீமானின் இந்த பேச்சைக் கண்டிக்கும் விதமாக விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் என்ன பாலியல் தொழிலாளியா சீமான்? என்னை பாலியல் தொழிலாளி என்று சொல்லியிருக்கிறாய்... நான் பாலியல் தொழிலாளியாக இருந்தால் எதற்காக பெங்களூரில் என்னுடைய அக்காவுடன் கஷ்டப்படப்போகிறேன்? இந்த நாள் வரை நீ தப்பித்து இருக்கலாம். ஆனால், இனிமேல் நீ தப்பிக்கவே முடியாது. என்னுடைய கண்ணீரை உன்னை என்ன செய்யப் போகிறது என்பதை மட்டும் நீ பார்… என்னுடைய கண்ணீர் உன்னை சும்மா விடாது” என கண்ணீருடன் விஜயலட்சுமி பேசியுள்ளார்.