இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்துச் சேவை மீண்டும் தொடங்குகிறது.
போக்குவரத்துச் சேவையை வழங்கும் சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி யாழ்ப்பாணத்தில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை வரும் 22.02.2025 மீண்டும் தொடங்கப்படுகிறது.
”அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்திலிருந்து பயணத்தைத் தொடங்கும் சிவகங்கை கப்பலானது காங்கேசன்துறையை அடையும். பின்னர் மீண்டும் பி.ப. 1.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு, நாகபட்டினத்தைச் சென்றடையும்.
www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் சென்று பயணச்சீட்டுகளை பதிவுசெய்ய முடியும். இந்தக் கப்பல் சேவையானது செவ்வாய் தவிர்த்து வாரத்துக்கு ஆறு நாள்கள் நடத்தப்படும்.” என்று அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.