ஹிமான்ஷி -
செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு ஆதரவு... ஹிமான்ஷியை ட்ரோல் செய்த வலதுசாரிகள்: தேசிய மகளிர் ஆணையம் கண்டம்!

Staff Writer

பெகல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் மனைவி ஹிமான்ஷிக்கு எதிரான ட்ரோல்கள், விமர்சனங்களைக் கண்டித்து அவருக்கு தேசிய மகளிர் ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பெகல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதில், திருமணமாகி ஒரு வாரம்கூட ஆகாத கடற்படை அதிகாரியான லெப்டினண்ட் வினய் நர்வால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது உடல் அருகே அவரது மனைவி ஹிமான்ஷி சோகத்துடன் அமர்திருந்த போட்டோ வைரலாக பரவியது.

இதைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்பட்ட நிலையில், “இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பரப்பாதீர்கள்”என ஹிமான்ஷி கேட்டுக் கொண்டார். இதனால், இணையத்தில் அவருக்கு எதிரான ட்ரோல்கள், விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:

ஒரு பெண்ணின் சொந்த வாழ்க்கையை வைத்தோ, அவரின் கருத்தை வைத்தோ ட்ரோல் செய்வது பொருத்தமானதல்ல. ஒவ்வொரு பெண்ணின் கண்ணியமும் மரியாதையும் விலைமதிப்பற்றது. ஹிமான்ஷி தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றால், அதை கண்ணியத்துடனும் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.