கூலி ரஜினி 
செய்திகள்

ரஜினி படங்களில் புதிய சாதனை: 5,000 திரைகளில் கூலி ரிலீஸ்

Staff Writer

கூலி திரைப்படம் வெளியாகும் திரைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு ரஜினியின் படங்களில் அதிக ஆவலைத் தூண்டும் படமாக உருவான கூலி முதல் நாளிலேயே பெரிய வசூலை நிகழ்த்தலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலம் கழித்து ஏ சான்றிதழுடன் வெளியாகும் ரஜினிகாந்த் திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், இப்படம் இந்தியா உட்பட 100 நாடுகளில் சேர்த்து 4500 - 5000 திரைகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினியின் திரைப்படங்களில் அதிக திரைகளில் வெளியாகும் முதல் படம் என்கிற சாதனையையும் கூலி அடைந்துள்ளது.