மசூத் அசார் 
செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர்: மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!

Staff Writer

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரி மற்றும் உறவினர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஹாவல்பூரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் வீடு தரைமட்டமானது. அவவரது குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனதாக அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தாக்குதலில் மசூத் அசாரின் சகோதரி, மகள் மற்றும் அவரது கணவர்களும் உயிரிழந்துள்ளனர்.

யார் இந்த மசூத் அசார்?

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார். இவர் இந்தியாவிற்கு எதிராக சதி வேலைகளை செய்துள்ளதால், இந்தியா தேடும் முக்கிய பயங்கரவாதி கருதப்படுகிறார்.

கடந்த 2001இல் நாடாளுமன்றத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல், 2008இல் நடந்த மும்பை தாக்குதல் ஆகியவற்றில் மசூத் அசாருக்கு தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.