செய்திகள்

நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூர்: இலக்குகளின் முழுப்பட்டியல் இதுதான்!

Staff Writer

செய்தியாளர் சந்திப்பில் இந்திய ராணுவம் வெளியிட்ட தகவல்படி பின்வரும் இலக்குகள் மீது ஆபரேஷன் சிந்தூரில் தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கப்பட்ட இலக்குகள்:

1. சவாய் நலா முகாம், முசாபராபாத்: லஷ்கர் இ தாய்பாவின் பயிற்சி மையம். சோன்மார்க்(அக்20, 2024), குல்மார்க் (அக் 24, 2024), ப்ஹல்காம்(ஏப்ரல் 22, 2025) தாக்குதல்களில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டது

2. சையதுனா பிலால் முகாம், முசாபராபாத்: ஜைஷ் இ முகமது பயிற்சி முகாம்

3. குல்பூர் முகாம், கோட்லி: லஷ்கரின் பயிற்சி முகாம். ஜம்முவின் ரஜோரி, பூஞ்ச் பகுதிகளில் கடந்த இரு ஆண்டுகளில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் இங்கு பயிற்சி பெற்றனர்.

4. பர்னாலா முகாம், பிம்பர்: ஆயுதப்பயிற்சி, வனப்பயிற்சி முகாம்

5. அப்பாஸ் முகாம், கோட்லி: லஷ்கரின் தற்கொலைப் படை தீவிரவாதிகள் பயிற்சி முகாம்.

பாகிஸ்தானுக்குள் தாக்கப்பட்ட இலக்குகள்:

6. சர்ஜால் முகாம், சியால்கோட்: ஜம்மு காஷ்மீர் போலிசார் 4 பேரை மார்ச் 25-இல் கொன்ற தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த இடம்

7. மெஹ்மூனா ஜோயா முகாம், சியால்கோட்: பதான்கோட் விமானதளத் தாக்குதலுக்கு இங்கிருந்துதான் திட்டமிடப்பட்டது.

8. மார்கஸ் தைபா முகாம், முரிடிகே: 2008 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த இடம். (கசாப், ஹெட்லி ஆகியோர் உள்ளிட்டோர்)

9. மார்கஸ் சுபானுல்லா, பஹவல்பூர்: ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையகம்.