அமைச்சர் சேகர்பாபு 
செய்திகள்

‘சீமானின் போலி அறிவிப்புக்கு மக்கள் மயங்கமாட்டார்கள்’ – அமைச்சர் சேகர்பாபு

Staff Writer

‘மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள்’ என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

'மேல்பாதி கிராம திரௌபதி அம்மன் கோயிலைத் திறக்கவில்லை என்றால், ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும்' என, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், நாதக போராட்ட அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:

“எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். அந்த கோயிலில் தினந்தோறும் பூஜை நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது. இன்னும் ஒருவாரத்தில் அந்த கோயில் திறக்கப்பட உள்ளது.

சீமானின் போலியான அறிவிப்பைக் கண்டு மக்கள் மயங்கமாட்டார்கள். இந்த ஆட்சியில்தான் தீர்க்கப்படாமல் இருந்த சாதி, மத, இன மோதல்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. பல வருடங்களாகப் பூட்டிக் கிடந்த 40 கோயில்கள் இந்த ஆட்சியில் திறக்கப்பட்டுள்ளன.” என்றார்.