பா.ம.க. கட்சித் தலைவர் பதவிக்கு அன்புமணி வரவேண்டும் என்பதற்காக அவரும் அவரின் மனைவியும் முன்னரே தன்னை வற்புறுத்தியதாக அக்கட்சியின் நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான பிரச்னை பகிரங்கமாக வெடித்து, பா.ம.க.வுக்குள் உட்கட்சி மோதல் வலுத்துள்ளது. இதற்கு சமரசம் செய்யும்முயற்சியாக ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரத்திலும் சென்னையிலும் மாறிமாறி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். அதில் சமரசம் ஏற்படவில்லை. இந்தத் தகவலை தைலாபுரத்தில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் இராமதாசே தெரிவித்தார்.
அன்புமணி மீது கடும் அதிருப்தியையும் அவர் வெளியிட்டார்.
தன்னை மானபங்கம் செய்துவிட்டதாகவும் இராமதாஸ் கூறினார்.