காவலர் தேர்வு (மாதிரிப்படம்) 
செய்திகள்

காவலர் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

Staff Writer

தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்.

180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.